சென்னை துறைமுகதில் இருந்து மகாராஷ்டிராவைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் சைலஸ் (வயது 25) என்பவர் கர்நாடகாவிற்கு இரும்பு உருளைகளை ஏற்றி கொண்டு வந்த பொழுது எம் எப் எல் ரவுண்டானா அருகே லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நடுவே உள்ள மின் கம்பத்தை இடித்ததில் மின்கம்பம் சாலையின் நடுவே சாய்ந்ததில் போக்குவரத்து பாதிப்பு எந்த ஒரு வாகனமும் செல்ல முடியாமல் சுமார் ஒரு மணி நேரம் பாதிப்பு ஏற்பட்ட நிலையில்
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணலி சப் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் மற்றும் காவல்துறையினர் மற்றும் போக்குவரத்து போலீசார் சாய்ந்திருந்த மின் கம்பத்தை உடனடியாக அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர் பின்னர் அனைத்து வாகனங்களும் செல்லத் தொடங்கி போக்குவரத்து சரி செய்யப்பட்டது பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி ஓட்டுநரிடம் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்