கரூர் செய்தியாளர் மரியான் பாபு
இந்திய திருநாட்டின் 79 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கரூர் மாநகராட்சியில் தேசிய கொடியை மேயர் கவிதா கணேசன் ஏற்றி வைத்தார். உடன் துணை மேயர் தாரணி சரவணன், மாநகராட்சி ஆணையர் கே.எம்.சுதா மாமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினர்.
முன்னதாக மாநகராட்சிக்கு அருகில் அமைந்துள்ள காந்தி பூங்காவில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர் மற்றும் மாநகராட்சியில் வைத்துள்ள மகாத்மா காந்தி, நேரு ஆகியோரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பின்னர் சுதந்திர போராட்டத் தியாகிகளுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவத்தினர். இந்நிகழ்ச்சியில் மாமன்ற அலுவலர்கள், ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்