திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகராட்சியில் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு எரிச்சாலை அருகே உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர்.செல்லதுரை தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.இதில் நகர்மன்ற துணைத் தலைவர்.மாயக்கண்ணன் அவர்கள் முன்னிலை வகித்து துப்புரவு பணியாளர்களுக்கு பரிசு வழங்கினர்.
மேலும் இந்நிகழ்வில் நகர கழக செயலாளர்.முகமது இப்ராகிம், நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி ஆணையாளர் வார்டு செயலாளர்கள், ஒப்பந்ததாரர்கள் பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.