தமிழ்நாடு டேக்வாண்டோ அசோசியேஷன் மற்றும் கோவை மாவட்ட டேக்வாண்டோ விளையாட்டு அமைப்பினர் இணைந்து மாவட்ட அளவிலான டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டி கோவை காந்திபார்க் பகுதியில் உள்ள மாரண்ண கவுடர் பள்ளி அரங்கில் நடைபெற்றது..
இந்திய டேக்வாண்டோ ஃபெடரேஷன் தலைவர் ஐசரி கணேஷ் அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்ற இதற்கான துவக்க விழாவில், தமிழ்நாடு டேக்வாண்டோ சங்கத்தின் துணை செயலாளர் ஸ்டாலின் முன்னிலை வகித்தார்..
கோவை மாவட்ட டேக்வாண்டோ சங்கத்தின் தலைவர் லட்சுமண நாராயணன் தலைமை தாங்கினார் சங்கத்தின் செயலாளர் சிஜுகுமார் போட்டிகளை ஒருங்கிணைத்தார் நிகழ்ச்சியில்,வாசவி கிளப் தலைவர் சரவணன்,செயலாளர் பாலசுப்ரமணியம்,புராஜக்ட் தலைவர் ரவிசங்கர் ஆகியோர் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தனர்..
கோவை மாவட்ட டேக்வாண்டோ விளையாட்டு சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த் ஆண்ட்லீ மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் ஏழு வயதுக்கு உட்பட்ட பிரிவு,சப் ஜூனியர்,கேடட்,ஜூனியர்,சீனியர் என பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற இதில்,கோவை உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்…
பூம்சே கிரோகி ஆகிய இரு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்ற நிலையில்,போட்டிகளில் கலந்து கொண்ட மழலை குழந்தைகள் மற்றும் மாணவிகள் ஆக்ரோஷமாக தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்…
தொடர்ந்து வெற்றி பெற்ற வீரர்,வீராங்கனைகளுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது தமிழகத்தில் முதன்முறையாக ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலமாக போட்டியை நடத்திக் கொடுத்த
நிகில் மணிகண்டனுக்கு டேக்வாண்டோ சங்க நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்..