இலங்கைக்கு கடத்த முயன்ற 50 லட்சம் மதிப்புள்ள பீடி இலை பறிமுதல் இரண்டு பேர் கைது.
தூத்துக்குடி லயன்ஸ் டவுன் பகுதியில் இருந்து ஊரணி ஒத்த வீடு பகுதிக்கு செல்லும் ஓடை மச்சாது பாலம் அருகில் இருந்து இலங்கைக்கு பீடியலை கடத்த முயல்வதாக கியூப் பிரிவு ஆய்வாளர் விஜயஅனிதாவுக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து உதவி ஆய்வாளர் ஜீவமணி தர்மராஜ் மற்றும் ராமச்சந்திரன் தலைமை காவலர்கள் பாலகிருஷ்ணன். இருதயராஜ். குமார். இசக்கிமுத்து மற்றும் காவலர்கள் அடங்கிய கியூ பிரிவு போலீசார் இடத்துக்கு அதிகாலை 4 மணிக்கு நேரில் சென்று பார்த்தபோது அங்கு டாட்டா கண்டனர் லாரியில் 35 கிலோ எடை கொண்ட 43 மூடை பீடி இலை 1500 கிலோ மொத்தம் பறிமுதல் செய்யப்பட்டது
இலங்கைக்கு கடத்த முயன்ற இரண்டு பைபர் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டது மேலும் அங்கு இருந்த இனிகோ நகரைச் சேர்ந்த ரமேஷ் மகன் அருண்குமார் மற்றும் காயல்பட்டினத்தைச் சேர்ந்த முகமது காசிம் மகன் இர் சாத் கான் ஆகிய இருவரையும் பிடித்து கைது செய்தனர் பிடிபட்ட பீடி இலைகளை சுங்கத்துறை வசம் ஒப்படைத்துள்ளனர் பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலையின் மதிப்பு சுமார் 50 லட்சம் ஆகும்