இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே கே.வேப்பங்குளம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீஅரியநாச்சியம்மன் ஆலயத்தில் வருடா வருடம்
ஆடி மாதத்தில் பொங்கல் விழா நடைபெறுவது.
அதன்படி கடந்த வாரம் காப்பு கட்டி, கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. திருவிழாவின் கடைசி நாளான நேற்று முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. முன்னதாக சிறுமியர் உட்பட ஏராளமான பெண்கள் முளைப்பாரியை நடுவில் வைத்து பக்தி பாடல்பாடி கும்மியடித்தனர்.
அதனைத் தொடர்ந்து முளைப்பாரி ஊர்வலம் வேப்பங்குளம் கிராமத்தில் முக்கிய வீதிகளின் வழியாக மேளதாளம், இசை வாத்தியங்கள்,வான வேடிக்கைகளுடன் சென்றது. இளைஞர்கள் உற்சாகமாக நடனமாடிக் கொண்டு சென்றனர். பின்னர் அப்பகுதியில் ஆற்றில் முளைப்பாரிகளை கரைத்து வழிபாடு செய்து தங்களது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர். இந்த ஊர்வலத்தில் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.