பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசத்தில் ஜி.கே. மூப்பனார் பிறந்த நாளை முன்னிட்டு விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கும் விழா…..
தமிழ் மாநில காங்கிரஸ் தஞ்சை மேற்கு மாவட்டம் சார்பில் மறைந்த ஜி.கே .மூப்பனார் 95-வது பிறந்த நாளை முன்னிட்டு விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கும் விழா பாபநாசம் கடைவீதியில் நடைபெற்றது.
விழாவிற்கு தஞ்சை மேற்கு மாவட்ட தலைவர் என்.கே. சேகர் தலைமை வகித்தார்.
பாபநாசம் தெற்கு வட்டார தலைவரும் ,பாபநாசம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளருமான எஸ். சேதுராமன், தஞ்சை மேற்கு மாவட்ட துணை தலைவர் சி. மாஸ்கோ, , பாபநாசம் வடக்கு வட்டாரத் தலைவர் கே.விவேக், பாபநாசம் கிழக்கு வட்டார தலைவர் ஜி.மணிகண்டன்,மாவட்ட பொருளாளர் சிவ.இ.சரவணன், தஞ்சை மேற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் ஆர். டி. ஆர். செந்தில்குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் தமிழ் மாநில காங்கிரஸ் மாநில செயற்குழு உறுப்பினர் சி. மிதுன் மூப்பனார் கலந்துகொண்டு ஜி.கே. மூப்பனார் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து 100 விவசாயிகள் மரக்கன்றுகளும் இனிப்புகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
விழாவில் மாநில, மண்டல, மாவட்ட, வட்டார ,நகர, பேரூர் நிர்வாகிகளும் ,மகளிரணி ,வர்த்தக அணி ஆகிய சார்பணி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
முடிவில் பாபநாசம் நகர தலைவர் எஸ்.பக்ருதீன் அலி அகமது நன்றி கூறினார்.