தமிழக முதலமைச்சர் ஆரம்பித்து வைத்த உங்களுடன் ஸ்டாலின் முகாம் தமிழகம் முழுவதும் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 55. 56. 57 ஆகிய மூன்று வார்டுகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம் கீதா மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற்றது.
மூன்று வார்டுகளுக்கு உட்பட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். அமைச்சர் கீதா ஜீவன் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு முகாமிலேயே ஜெராக்ஸ் மிசின் அமைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு ஜெராக்ஸ் எடுத்து கொடுக்கப்பட்டது.
முகாமை அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா ஆகியோர் பார்வையிட்டு பொதுமக்களுக்கு முகாமிலேயே ஆணைகளை வழங்கினார்-தொடர்ந்து பொதுமக்களின் குறைகளையும் அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் எம்எல்ஏ சண்முகையா ஆகியோர் கேட்டறிந்தனர்.
அதன் பின்பு மதிய உணவு இடைவேளை நேரம் என்பதால் ஏராளமான பொதுமக்கள் முகாமில் இருந்ததை கருத்தில் கொண்டு அமைச்சர் கீதா ஜீவன் தனது சொந்த செலவில் அங்கு இருந்த 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மதிய உணவுகளை அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் சண்முகையா எம்எல்ஏ ஆகிய இருவரும் இணைந்து பொதுமக்களுக்கு வழங்கினர்.
இந்த நிலையில் திடீரென்று அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் சண்முகையா எம்எல்ஏ பொதுமக்களுடன் அமர்ந்து மதிய உணவுகளை சாப்பிட்டனர்.
இதனை பார்த்த பொதுமக்கள் அமைச்சர் கீதா ஜீவனை பொதுமக்கள் பாராட்டினர். அமைச்சர் என்ற ஒரு பந்தாவும் இல்லாமல், பொதுமக்களுடன் அமர்ந்து அமைச்சர் கீதா ஜீவன் மதிய உணவு அருந்தியது பரபரப்பாக பொதுமக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. தாசில்தார்கள் முருகேஸ்வரி, செல்வகுமார், மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் வக்கீல் பாலகுருசாமி, மாநகராட்சி உதவி ஆணையர் கல்யாணசுந்தரம், திமுக மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் மற்றும் அரசு அதிகாரிகளும், திமுகவினரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.