கந்தர்வக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் தொடக்கநிலை மாணவர்களுக்கான குறுமவள அளவிலான கலை திருவிழா போட்டிகள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு உயர்நிலைப் பள்ளிகள் கோமாபுரம், கல்லாக்கோட்டை, குளத்தூர் நாயக்கர்பட்டி, புதுநகர், வேலாடிப்பட்டி ,வெள்ளாள விடுதி, கோமாபுரம் உள்ளிட்ட குறுவள மையத்தில் நடைபெற்றது.
கந்தர்வ கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற போட்டியை தலைமை ஆசிரியர் அமிர்தம் மாலதி தலைமையேற்று தொடங்கி வைத்தார். அந்தந்த குறுவள மையங்களில் உள்ள தலைமை ஆசிரியர்கள் தலைமையில் போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது.
வட்டாரக் கல்வி அலுவலர் மெகராஜ் பானு முன்னிலை வகித்தார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் பாரதிதாசன் அனைவரையும் வரவேற்று பேசினார். தொடக்கநிலை மாணவர்களுக்கான கலைத் திருவிழா போட்டி களான ஒப்புவித்தல் தமிழ், ஆத்திச்சூடி ஆங்கிலம், பாடல்கள், கதை கூறுதல், வண்ணம் தீட்டுதல், பேச்சு போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல், மெல்லிசை தனிப்பாடல்கள், தேச பக்தி பாடல்கள், களிமண் பொம்மைகள் செய்தல், மாறுவேடப் போட்டி, நாட்டுப்புற நடனம் (தனி), நாட்டுப்புற நடனம் (குழு), பரதநாட்டியமஓவியம் வரைந்து வண்ணம், தனி நபர் நடிப்பு உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது.
போட்டிகளில் முதலிடம் பெற்ற மாணவர்கள் வட்டார அளவிலான போட்டிகளில் கலந்து கொள்கின்றனர். வட்டார அளவிலான போட்டிகளில் தொடக்கநிலை மாணவ மாணவிகள் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தங்களுடைய திறமைகளை கலைத்திருவிழாவில் வெளிப்படுத்தினார்.
இதில் ஒருங்கிணைப்பு மற்றும் நடுவர் பணிகளை தலைமை ஆசிரியர்கள் பழனிவேல்,சேகர், சிவா, அழகு சுந்தரம்,செல்லச் சாமி, ரெனால்ட் ஸ்டீபன், சுரேஷ் குமார், காளீஸ்வரன், சின்னராசா பட்டதாரி ஆசிரியர்கள் ஜெயக்குமார் ,ரகமதுல்லா,கலைமணி, சங்கர், ஆனந்த்ராஜ் , தவச்செல்வம், ஆசிரியர்கள் தமிழரசன், கார்த்திகேயன், சிறப்பாசிரியர்கள் ரம்யா ,ராணி,அறிவழகன், ராதா, பிரியா உள்ளிட்டோர் செயல்பட்டனர்.