வரும் 03-09-2025 அன்று நடைபெறவுள்ள “உங்களுடன் ஸ்டாலின்” முகாமை முன்னிட்டு, கெம்பட்டி பகுதியில் உள்ள தர்மராஜா கோவில் வீதியில் அமைந்துள்ள மண்டபத்தில் நடைபெறும் முகாமுக்கான முன்னேற்பாடுகள் மற்றும் மராமத்து பணிகளை நேரில் பார்வையிட்டார் கோவை மாநகராட்சி பொது சுகாதார குழுத் தலைவர் பெ.மாரிசெல்வன் ஆய்வு செய்தார்.
மராமத்து பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் உடனடியாக உத்தரவு வழங்கினார்.
பின்னர், பகுதியில் மழைநீர் வடிகால் நிரம்பி வழியும் இடங்களையும் நேரில் பார்வையிட்டார். உடனடியாக அதிகாரிகளை தொடர்பு கொண்டு, கழிவுநீர் அகற்றும் வாகனத்தை வரவழைத்து தேங்கிய மழைநீரை அகற்றி சீரமைப்பு பணிகளை நடத்தினார்.
அத்துடன், பகுதி மக்கள் புதிதாக மழைநீர் வடிகால் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். விரைவில் செய்து தருவதாக கூறினார்.
இந்த ஆய்வில் உதவிப் பொறியாளர் நாகேந்திரன், சுகாதார ஆய்வாளர் தனபால், பகுதி பொறுப்பாளர் என்.ஜே.முருகேசன், வார்டு செயலாளர்கள் நா.தங்கவேலன், பா.ஆனந்தன், மற்றும் கழக நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.