கொளத்தூர் இந்து முன்னணி இந்து இளைஞர் எழுச்சி நற்பணி மன்றத்தின் சார்பில் 11 ஆம் ஆண்டு தரணி விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பிரபாண்டமான பித்தளை தட்டு சிலை திறப்பு.
செங்குன்றம் செய்தியாளர்
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கொளத்தூர் பூம்புகார் நகர் சாலை சந்திப்பில் இந்து இளைஞர் எழுச்சி நற்பணி மன்றத்தின் சார்பில் 42 அடி உயரமுள்ள தரணி விநாயகர் சிலைக்கு 2,300 எண்ணிக்கையுள்ள பித்தளை தட்டுகளும் விநாயகரின் கிரீடத்திற்கு 1500 குங்குமசிமிழ் தட்டுகளும் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு பொதுமக்களின் காட்சிக்காக திறக்கப்பட்டுள்ளது இதனை பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் விநாயகரை வழிபட்டு சென்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை இந்து இளைஞர் எழுச்சி நற்பணி மன்றத்தின் தலைவர் பால்ராஜ் செயலாளர் மணிகண்டன், வெங்கடேசன் ,முத்து ,உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கு கொண்டு சிறப்பித்தனர் முன்னதாக ஆனந்த் சுவாமிஜியின் கணபதி பூஜை நடைபெற்றது.