மதுரை மீனாட்சி சுந்தேரஸ்வரர் கோவிலில் 11 அடி உயரம் கொண்ட முக்குறுணி விநாயகருக்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கொழுக்கட்டை சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மதுரை மீனாட்சியம்மன் கோவில் முக்குறுணி விநாயகருக்கு அதிகாலையில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.
மேலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அருகம்புல் மாலை மற்றும் பல்வேறு மலர்களால் ஆன மாலைகள் சாத்தப்பட்டு விநாயகருக்கு வெள்ளிக்க வசம் அணிவித்து தீபாராதனை நடைபெற்றது.
இதையடுத்து 18 படி பச்சரிசியை மாவில் வெல் லம், தேங்காய், நெய், முந்திரி, ஜாதிக்காய், கிராம்பு, ஏலக்காய், சர்க்கரை, எள் கலந்து கொழுக்கட்டை தயாரிக்கப்பட்டது. இதனை சிவாச்சாரியார்கள் தொட்டிலில் கட்டி மேள, தாளங்கள் முழங்க முக்குறுணி விநாயகருக்கு கொண்டு செல்லப்பட்டு முக்குறுணி விநாயகர் சன்னதியில் உச்சிக்கால பூஜை யின்போது விநாயகருக்கு கொழுக்கட்டை படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதைத் தொடர்ந்து விநாயகருக்கு படைக்கப்பட்ட கொழுக்கட்டை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து மீனாட்சியம்மன் கோவில் பிரகாரத்தில் உள்ள விபூதி விநாயகரையும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர