கோவை
கோவை மாநகராட்சி பொது சுகாதார குழுக்கூட்டம் இக்குழு தலைவர் மாரிசெல்வன் தலைமையில் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்திற்கு பெருநகர நகர்நல அலுவலர் டாக்டர் பூபதி முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது .அதன் விபரம் வருமாறு தனியார் நிறுவனங்களில் தேங்கும் அதிகப்படியான குப்பைகளை தேங்குவதும், அதை இந்நிறுவனங்கள் தனியார் ஒப்பந்ததாரர்கள் மூலம் குப்பைகளை அகற்று வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

அவ்வாறு அகற்றப்படும் குப்பைகள் முறைப்படி குப்பை கிடங்குகளில் கொண்டு சேர்க்காமல் நகரின் முக்கிய பகுதிகள் மற்றும் குளக்கரையில் கொட்டப் படுவதாக தொடர் புகார்கள் வந்தன வண்ணம் உள்ளது.ஆகவே இந்த தனியார் நிறுவனங்கள் குப்பைகளை மாநகராட்சியிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க நாளை நடைபெற உள்ள மாமன்ற கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக பொது சுகாதார குழு தலைவர் தெரிவித்தார்.

மாநகர் பகுதியில் உள்ள தெரு நாய் தொல்லைக்கு தீர்வு காணப்படும் எனவும்,கோவை மாநகராட்சி வெள்ளலூர் குப்பை கிடங்கில் நடந்து வரும் பணிகளை மாமன்ற உறுப்பினர்களை நேரில் சென்று பார்வையிடுவது குறித்தும் நடவடிக்கை மேற்க் கொள்ளப்படும் எனவும் பொது சுகாதார குழு தலைவர் மாரி செல்வன் தெரிவித்தார். தமிழ்நாடு முதலமைச்சரின் கனவு திட்டமான குப்பையில்லா மாநகராட்சியை உருவாக்க பாடுபட்டு வருகிறோம் என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் பொது சுகாதார குழு உறுப்பினர்களும்,மாமன்ற உறுப்பினர்கள் சம்பத், அஸ்லாம் பாட்ஷா,வசந்தா மணி,கலாவதி போஸ்,சுமித்ரா,அம்சவேணி,துணை நகர்நல அலுவலர் மரு.சரவணன், மத்திய மண்டல சுகாதார அலுவலர் (பெ) குணசேகரன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *