போடிநாயக்கனூரில் வ உ சிதம்பரனார் பிறந்த நாளில் அவருடைய திருஉருவ சிலைக்கு எம்பி மாலை அணிவித்து மரியாதை தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் உள்ள தன் சொத்தை யெல்லாம் விற்று வெள்ளையனை எதிர்த்து அவனுக்கு நிகராக கப்பலோட்டிய ஒப்பற்ற தமிழன் மாடு கூட இழுக்க திணறுகிற செக்கை தனி மனிதனாய் நாட்டின் விடுதலைக்காக சிறையில் செக்கிழித்த செம்மல் வ.உ. சிதம்பரனார் 154வது பிறந்த நாளை யொட்டி அவருடைய திரு உருவச் சிலைக்கு தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் பொதுக்குழு உறுப்பினர் எம் சங்கர் நகர செயலாளர் ஆர் புருஷோத்தமன் பொதுக்குழு உறுப்பினர் ராஜா ரமேஷ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.