தமிழ்நாடு இளம் விவசாயிகள் சங்கத்தின் தலைவர் செளந்தரராஜன்
நாமக்கல் மாவட்டத்தில் வேளாண்மை துறையின் கீழ் செயல்படும் நாமகிரிப்பேட்டை பேட்டை வேளாண்மை விரிவாக்கம் மையத்தில் மானிய திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு வழங்க இருந்த விதை நிலக்கடலையை விவசாயிகளுக்கு வழங்காமல் வெளிச்சந்தையில் விற்பனை செய்த திருமதி.உமாமகேஸ்வரி, வேளாண்மை உதவி இயக்குநர் அவர்களின் மீது உடனடியாக விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஜூலை 25 ஆம் நாள் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் இளம் விவசாயிகள் சங்கத்தின் சார்பாக மனு கொடுக்கப்பட்டுள்ளது.
அதன்பிறகு வேளாண்மை இணை இயக்குனர் விசாரணை செய்ததன் பேரில் முறைகேடு நடந்தது தெரிய வந்தும், வேளாண்மை உதவி இயக்குனரிடம் ஏதோ ஆதாயத்தை பெற்றுக்கொண்டு எந்த ஒரு தவறும் நடக்கவில்லை என்று பதில் அளித்துள்ளார். எனவே மீண்டும் இது சம்பந்தமாக விசாரணை செய்து விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய மானிய திட்டத்தில் முறைகேடு செய்த அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் மேலும் விவசாயிகளின் நலன் கருதி மானிய திட்டங்கள் கிடைக்க வழிவகை செய்யுமாறு இளம் விவசாயிகள் சங்கத்தின் சார்பாக நான் தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.என தனியார் ஹோட்டலின் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இளவரசன் கரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நவீன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்