கோவை கண்ணப்ப நகர், நூருல் உலூம் சுன்னத் ஜமா அத் பள்ளிவாசல் மற்றும் மதரஸா சார்பாக நடைபெற்ற 36 ஆம் ஆண்டு மீலாது விழா
இஸ்லாம் மார்க்க கல்வி போட்டி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிப்பு
இஸ்லாமியர்களின் இறை துாதரான நபிகள் நாயகம் பிறந்த நாள் விழா மீலாது நபி விழாவாக அனைத்து இஸ்லாமிய மக்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கோவை கண்ணப்ப நகர் நூருல் உலூம் சுன்னத் ஜமா அத் மஸ்ஜித் மற்றும் மதரஸா,சார்பாக 36 ஆம் ஆண்டு மீலாது நபி தின விழா கொண்டாடப்பட்டது..
முன்னதாக நபிகள் நாயகம் குறித்த வரலாறு,மற்றும் இஸ்லாம் சமயத்தின் சிறப்புகள் குறித்து இஸ்லாமிய அறிஞர்களின் சொற்பொழிவு நடைபெற்றது..
இதே போல இஸ்லாம் மார்க்க கல்வி குறித்து மாணவ,மாணவிகளுக்கு போட்டி தேர்வுகள் நடைபெற்றன இந்நிலையில் தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா மதரஸா முன்பாக நடைபெற்றது..
நூருல் உலூம் சுன்னத் ஜமா அத் தலைவர் முஹம்மது அலி ஜின்னா தலைமையில் நடைபெற்ற விழாவில்,சிறப்பு விருந்தினர்களாக கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார்,மாநகராட்சி மேயர் ரங்கநாயகி,மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் அலிமா ராஜா உசேன்,அஹமது கபீர்,பேபி சுதா ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்..
தலைமை விருந்தினராக கோவை மாவட்ட தமிழக அரசு காஜி அப்துல் ரஹீம் இம்தாதி கலந்து கொண்டார் விழாவில் கல்வி குழு சார்பாக நடைபெற்ற தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்..
நிகழ்ச்சியில், நூருல் உலூம் சுன்னத் ஜமா அத் மஸ்ஜித் மற்றும் மதரஸா நிர்வாகிகள் அபுதாஹீர்,அஜீஸ் எல்லா,உபைதுர் ரஹ்மான்,ஆசிக்,ரியாஸ் அகமது,ஹாபீழ் உமர் பாரூக்,முகம்மது மைதீன், உபைதுல்லா. மற்றும் ஜமாத் இந்நாள் முன்னாள் நிர்வாகிகள் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்…