அலங்காநல்லூர்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள 15.பி. மேட்டுப்பட்டி கிராமம் வெள்ளை நகரில் அமைந்துள்ள ஸ்ரீ மெய்யணான்டி சுவாமி திருக்கோவில் பத்தாம் ஆண்டு உற்சவ விழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது.
இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர. சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடந்தது. கிடாய் வெட்டி சுவாமிக்கு படைக்கப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை 15.பி.மேட்டுபட்டி வெள்ளை நகர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.