அலங்காநல்லூர்.

வ.உ.சிதம்பரம்பிள்ளை பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள பெரியஊர்சேரி கிராமத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு வெள்ளாளர் முன்னேற்ற கழக மாநில மகளிரணி தலைவரும் தென்மண்டல அமைப்பாளருமான அன்னலட்சுமிஷகிலா கணேசன், மாலை அணிவித்து மரியாதை செய்தார். தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க பெண்கள் பால்குடம் எடுத்தல் மற்றும் ஆண்கள், அழகு குத்தியும் மந்தை பகுதியில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. அதனையும் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது வ.உ.சிதம்பரம்பிள்ளை இந்திய விடுதலைக்காக போராடியவர் வெள்ளையர்களிடம் எதிர்த்து கேள்வி கேட்டதற்காக வாய்பூட்டு சட்டம் ஏற்றப்பட்டு தனது வழக்கறிஞர் பதவியை தியாகம் செய்தவர் இது போன்று எண்ணற்ற தியாகங்களுக்கு எடுத்துக்காட்டான செக்கிழுத்த செம்மல் முப்பாட்டன் வ.உ.சிதம்பரம் பிள்ளையை போற்றி வணங்குவோம் இவரின் பிறந்தநாளை வழக்கறிஞர் தினமாக அரசு அறிவிக்க வேண்டும் என வெள்ளாளர் முன்னேற்றக் கழக மாநில மகளிரணி தலைவரும் தென் மண்டல அமைப்பாளருமான திருமதி. அன்னலட்சுமி ஷகிலாகணேசன், அரசுக்கு கோரிக்கை வைத்தார். விழாவுக்கான ஏற்பாடுகளை பிள்ளைமார் உறவின்முறை சங்கம் மற்றும்
வ.உ.சி. இளைய தலைமுறையினர் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *