அலங்காநல்லூர்,
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள ஆதனூர் கிராமத்தில் அமைந்துள்ள
ஸ்ரீ காரணத்தாய் இருபத்தோருபந்தி தெய்வங்கள் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது.
இதில் மங்கல இசை தேவதா அனுக்ஞை ஊர் பூர்வீக சுவாமிகள் அழைப்பு புண்ணிய ஸ்தானம் வாஸ்து சாந்தி ஹோமங்களை தொடர்ந்து யாக சாலையில் இருந்து சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க கடம் புறப்பாடாகி அழகர்கோவில், ராமேஸ்வரம் உள்ளிட்ட புனித தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கோவிலை சுற்றி வலம் வந்து வானத்தில் கருடன் வட்டமிட கோவில் கருவறையில் அமைந்துள்ள அம்மனுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பூஜை பொருட்களும் அன்னதானமும் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை
வெள்ளைகுட்டி வகையாறா மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.