திருவெற்றியூரில் கடலோர சாலையில் முள் கம்பி வேலி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது இதனை சென்னை மாநகர ஆணையர் பார்வையிட்டார்.
திருவொற்றியூர் நெடுஞ்சாலை கடலோர பகுதிகளில் சமூக விரோதிகள் கோழி கழிவுகள் குப்பைகள் பிளாஸ்டிக் பொருட்களை வெளியில் இருந்து கொண்டு வந்து கடற்கரையோரம் கொட்டுவதால் துர்நாற்றமும் கடல் நீர் மாசுபடும் நிலையில் உள்ளது
இதனை அறிந்த சென்னை மாநகர ஆணையர் குமரகுருபரன் வெளிப்பகுதிகளிலிருந்து கொண்டுவரும் குப்பைகளை கடலோரத்தில் கொட்டுவதை தடுக்கும் வகையில் சாலையோரம் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு இரும்பு முள் கம்பி வேலி அமைக்க உத்தரவிட்டார்
இந்த உத்தரவின் பேரில் வடக்கு மண்டல வட்டார துணை ஆணையர் கட்டார் ரவி தேஜா தலைமையில் திருவொற்றியூர் மண்டல பொறுப்பு அதிகாரி பாண்டியன் தலைமையில் உதவி செயற்பொறியாளர் நக்கீரன் இளநிலை பொறியாளர்கள் தினேஷ் ஹேமகுமார் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் கடலோர சாலையில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு சிமெண்ட் கான்கிரீட் தூண்கள் அமைத்து அதில் இரும்பு முன் கம்பி வேலி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது