செங்குன்றம் செய்தியாளர்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளுக்கு நாள் மருத்துவமனைகள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில வாரம் முன்பு அண்ணா சாலையில் உள்ள அடுக்குமாடி வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்து. இதே போல் வணிக வளாகம், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் மருத்துவமனைகளில் விபத்துகள் அதிகரித்து வருவதால்,
ஆபத்தான காலங்களில் முன்னெச்சரிக்கை இருப்பது குறித்தும், எந்த மாதிரியான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு தமிழ்நாடு தீயணைப்பு துறையினருக்கு தீயணைப்பு துறை இயக்குநரும், டிஜிபியுமான சீமா அகர்வால் உத்தரவிட்டிருந்தார்.
தீயணைப்பு துறை இயக்குநரின் உத்தரவை தொடர்ந்து தீயணைப்பு துறை இணை இயக்குநர் சத்யநாராயணன் வழிகாட்டுதலின்படி வடசென்னை மாவட்ட அலுவலர் மனோபிரசன்னா தலைமையில் உதவி மாவட்ட அலுவலர் முருகன் மற்றும் கொளத்தூர்
நிலையை அலுவலர் ரமேஷ் முன்னிலையில் சென்னை கொளத்தூரில் உள்ள பெரியார் அரசு மருத்துவமனையில் தீ விபத்து பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் வடசென்னையில் உள்ள தீயணைப்பு நிலையங்களில் பயன்படுத்தப்படும் தீயணைப்பு வாகனங்கள், தீயணைப்பு உபகரணங்கள், மரம் மற்றும் இரும்பு ராடு கட் செய்வதற்கான உபகரணங்கள் மற்றும் தீயணைப்பு துறையில் பயன்படுத்தப்படும் அதிநவீன புரோண்டோ ஸ்கைலிப்ட் வாகனம் உள்ளிட்டவைகளுக்கு மருத்துவர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன.
மருத்துவமனையில் தீ விபத்தோ அல்லது வேறு ஏதேனும் அசம்பாவிதங்கள் நடக்கும்போது என்ன செய்ய வேண்டும் என எடுத்துரைக்கப்பட்டது. மேலும் தீ விபத்து ஏற்பட்டால் முன்னெச்சரிக்கையாக மருத்துவமனை வளாகத்தில் உள்ள பொருட்களை வைத்து எவ்வாறு தீயை அணைக்க வேண்டும் என்பது குறித்தும், மேலும் தீ விபத்து ஏற்பட்டால் தீயணைப்பு துறையினர் எவ்வாறு செயல்படுவார்கள், மருத்துவமனை வளாகத்தில் உயர்ந்த இடத்தில் யாரேனும் சிக்கி கொண்டால் அவர்களை எவ்வாறு தீயணைப்பு துறையினர் கயிர்கள், ஏணிப்படி மற்றும் புரோண்டோ ஸ்கைலிப்ட் மூலம் எப்படி காப்பற்றப்படுவார்கள் என்பது குறித்து தீயணைப்பு துறையினர் செய்முறை விளக்கமாக செய்து காட்டினர். மேலும் மருத்துவர்கள் சந்தேகங்களுக்கு பாதுகாப்பாக இருப்பது குறித்தும் விளக்கம் அளித்தனர்.
இந்த தீ விபத்து பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் வடசென்னையில் உள்ள எஸ்பிளனேடு, வியாசர்பாடி, தண்டையார்பேட்டை, ராயபுரம், செம்பியம் ஆகிய தீயணைப்பு நிலையங்களை சேர்ந்த 5 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 60 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் இந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.