திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வடக்கு அக்ரஹாரம் சார் பதிவாளர் அலுவலகம் அருகே உப்பு சத்தியாக்கிரக விழிப்புணர்வு இயக்கம் சார்பில் மகாகவி பாரதியாரின் 106- வது நினைவு தினம் அனுஷ்டிப்பு நடைபெற்றது. உப்பு சத்தியாக்கிரக விழிப்புணர்வு இயக்க மாநில இளைஞர் அணி தலைவர் வலங்கைமான் குலாம் மைதீன் மேற்பார்வையில் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டு, பாரதியாரின் நினைவாக மாணவர்களுக்கு நினைவு பரிசும், மரக்கன்றுகளும், இந்நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக வருகை தந்த பாரதி பெயரையே தன் பெயராக கொண்ட வலங்கைமான் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் நினைவு பரிசுகளையும், மரக்கன்றுகளையும் வழங்கி, அவர் கரங்களால் மரக்கன்றையும் நடப்பட்டது.
பாரதியாரின் விடுதலை வேட்கை., அவர் தமிழுக்காக எழுதிய கவிதை புத்தகங்கள், சிறுகதைகள், குறிப்பாக கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் ஆகியவற்றை பற்றி தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் வெற்றிவேலன் அவர்கள் எடுத்துரைத்தார்,
முன்னதாக கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் கலந்து கொண்டு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட காவல் உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் அவர்களை கெளரவ படுத்தியும், மாணவர்களையும், பொது மக்களையும் வரவேற்று பேசினார். நிகழ்வில் தொழிற்சங்க துணைத் தலைவர் செம்மங்குடி கோபி, பேரூராட்சி மின் விளக்குகள் பிரிவு அலுவலர் ரகு, இளைஞர் காங்கிரஸ் வட்டார தலைவர் அப்துல் ரஹ்மான், வேதா, அன்பு மற்றும் மாணவர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். இறுதியாக அனைவராலும் பாரதியாருக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.