கோவை மாவட்டம் வால்பாறையில் பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்தநாளை முன்னிட்டு வால்பாறை நகரக் கழகம் சார்பாக மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது முன்னதாக நகர கழக அலுவலகத்திலிருந்து நகரக் கழகச் செயலாளர் மயில் கணேசனின் ஆலோசனைக்கு இணங்க நகர துணைச்செயலாளர் பொன் கணேசன் தலைமையில் ஊர்வலமாக வந்து பேரறிஞர் அண்ணாவின் திரு உருவச் சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி சிறப்பாகக் கொண்டாடப்பட்டது இந்நிகழ்ச்சியில் வர்த்தக அணி செயலாளர் சண்முகவேல், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஆர். ஆர். பெருமாள், ஐடி விங் செயலாளர் சண்முகம், 17 வது வார்டு கவுன்சிலர் ஜெ.மணிகண்டன், இளைஞரணி செயலாளர் ஆர். ஆர். சசிகுமார், நகர வார்டு செயலாளர் எம். ஆர். எஸ். மோகன், கக்கன் காலனி ரகு, வாழைத்தோட்டம் சாந்தி, வேவர்லி சுரேஷ், இரும்பு ரவி, தமிழரசு, நகர அம்மா பேரவை இணைச்செயலாளர் ராஜமாணிக்கம், சோலையார், பெரியசாமி மற்றும் அதிமுக நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்