அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:
அரியலூரில் நடந்தது அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் காத்திருப்பு போராட்டத்தை ஆதரித்து சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் அரியலூர் பஸ் நிலையம் அருகே நடந்தது ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் சந்தானம் தலைமை தாங்கினார்.
மாவட்ட தலைவர் சகுந்தலா துணைத்தலைவர்கள் சிற்றம்பலம் கிருஷ்ணன் ரவீந்திரன் மாவட்ட செயலாளர் தோழர் துரைசாமி தையல் தொழிற்சங்க மாவட்ட தலைவர் சரண்யா ஆட்டோ தொழிற்சங்கம் மாவட்ட பொருளாளர் ராமசாமி சாலை போக்குவரத்து மாவட்ட செயலாளர் ராம்குமார் ஜெயங்கொண்டம் போக்குவரத்து வீரப்பன் வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் துரை அருணன் ஆகியோர் போராட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கி பேசினார்கள்.
குடும்ப குடும்ப ஓய்வூதியம் 7850 வழங்க வேண்டும் காலி பணியிடங்களை உடனே நிறைவேற்ற வேண்டும் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு அன்றைய தினமே பணப்பலன்களை கொடுக்க வேண்டும் 01/04/2003 பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய பென்ஷன் திட்டம் வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை எழுப்பி சிறப்புரை ஆற்றினார்கள்