பெரம்பலூர் மாவட்டம். ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.17.19 கோடி மதிப்பீட்டில் 9 புதிய திட்டப்பணிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிகளில் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது :
மக்களின் தேவைகளை அறிந்து திட்டங்களை வழங்குவதில் இந்தியாவிற்கே முன்னோடி முதலமைச்சராக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஏழை எளிய அடித்தட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு பொது மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து அவற்றின் நிறைவேற்றித் தர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்கள்.
அதன் அடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு திட்டங்களின் மூலம் பல்வேறு மக்கள் நலத்திட்ட பணிகள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்டபட்ட மங்கலம் கிராமத்தில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.84.50 லட்சம் மதிப்பீட்டில் கீழமாத்தூர் – மங்கலம் செல்லும் சாலையினை பலப்படுத்தும் பணி, தொண்டபாடி பகுதியில் ரூ.23.70 மதிப்பீட்டில் தொண்டபாடி முதல் சடைக்கன்பட்டி செல்லும் சாலை பலப்படுத்தும் பணி, நொச்சிக்குளம் ஊராட்சியில் ரூ.1.82கோடி மதிப்பீட்டில் ஏ.கே.கே.சாலை முதல் புஜங்கராயநல்லூர் சாலை பலப்படுத்தும் பணி, அருணகிரிமங்கலம் ஊராட்சியில் ரூ.50.15 லட்சம் மதிப்பீட்டில் ஆதிதிராவிட குடியிருப்பு பகுதிக்கு செல்லும் சாலையினை பலப்படுத்தும் பணி, திம்மூர் ஊராட்சியில் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் திம்மூர் – மேத்தால் சாலையினை பலப்படுத்தும் பணி, கொட்டரை ஊராட்சியில் ரூ.1.19 கோடி மதிப்பீட்டில் கொட்டரை – ஆதனூர் செல்லும் சாலையினை பலப்படுத்தும் பணி,கொளக்காநத்தம் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.1 கோடி மதிப்பீட்டில் கொளக்காநத்தம் அரசு கலை கல்லூரி கட்டும் பணி, கூடலூர் ஊராட்சியில் ரூ.7.83 கோடி மதிப்பீட்டில் கூடலூர் – கூத்தூர் இடையே செல்லும் சாலையில் மருதையாற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணி, சாத்தனூர் ஊராட்சியில் ரூ.3.07 கோடி மதிப்பீட்டில் கொளக்காநத்தம் – சாத்தனூர் செல்லும் சாலையில் மருதையாற்றின் குறுக்கே உயர் மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி என மொத்தம் ரூ17.19 கோடி மதிப்பீட்டில் 9 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
இந்த பணிகள் அனைத்தும் விரைவில் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் துரிதமாக மேற்கொள்ள துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வுகளில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தேவநாதன், முன்னாள் ஆலத்தூர் ஒன்றியக்குழுத்தலைவர் திரு.என்.கிருஷ்ணமூர்த்தி, அட்மா தலைவர் வீ.ஜெகதீஸ்சன், பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அனிதா, ஒன்றிய நிர்வாகிகள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வ. சுப்ரமணியன், மகாராஜன் ராமசாமி, ஒப்பந்ததாரர்கள் ரா.பிரபு,S. ரெங்கசாமி, உள்ளிட்ட அரசு அலுவலர்கள்பலர் கலந்துகொண்டனர்.