தருமபுரி நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின்75 -வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் ரத்த தான முகாம். தருமபுரி நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாபெரும் ரத்ததான முகாம் பாஜக நகர கட்சி அலுவலகத்தில் நகர தலைவர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது.
இந்த முகாமில் 50-க்கும் மேற்பட்டோர் ரத்தம் தனம் செய்தனர். ரத்தம் கொடுத்த அனைவரையும் கௌரவிக்கும் விதமாக சான்றிதழ் வழங்கப்பட்டது.
. மாநில இளைஞரணி செயலாளர் பிரபாகரன் முரளி, மாவட்ட தலைவர் சரவணன், நகர செயலாளர் பூவரசன், நகரத் துணைத் தலைவர் சீனிவாசன், நகர செயலாளர் அண்ணாதுரை, நகர உறுப்பினர்கள் கவியரசு, செல்வம், தருமபுரி பாரதிய ஜனதா கட்சி நகர உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.