கோவையில் வாக்கு திருட்டு மோசடி எனும் நூல் வெளியீட்டு விழா

ராகுல் காந்தி நடத்திவரும் வாக்கு திருட்டு மோசடி தொடர்பான போராட்டங்களின் தொகுப்பாக படைக்கப்பட்ட வாக்கு திருட்டு மோசடி நூலை பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரஃபி வெளியிட்டார்..

கடந்த 2024 மக்களவைத் தேர்தல் முதல் பல்வேறு மாநிலத் தேர்தல்களில் பாஜகவுடன் தேர்தல் ஆணையம் கூட்டு வைத்து மிகப் பெரிய அளவில் வாக்காளர் மோசடி நடந்துள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

இது குறித்த தரவுகளை வெளியிட்ட அவர், ஐந்து விதமாக ‘வாக்குகள் திருட்டு’ நடந்துள்ளதாக கூறிய அவர்,இது தொடர்பாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்..

இண்டியா கூட்டணி கட்சிகள் உட்பட நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரிடையே ராகுலின் வாக்கு திருட்டு மோசடி போராட்டத்திற்கு ஆதரவு பெருகி வருகின்றது..

இந்நிலையில் ராகுல் காந்தி வெளியிட்ட வாக்கு திருட்டு மோசடி குறித்த ஆதாரங்கள் மற்றும் அவர் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் விதமாக வாக்கு திருட்டு மோசடி எனும் நூல் வெளியீட்டு விழா கோவையில் நடைபெற்றது..

பல் சமய நல்லுறவு இயக்கம் குத்தூசி குருசாமி படிப்பகம் இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சியில், பல் சமய நல்லுறவு இயக்கத் தலைவர் முகமது ரபி புத்தகத்தை வெளியிட்டார்..

இதில்,தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாநிலதலைவர் முகமது ஆரிப் பல்சமய நல்லுறவு இயக்க நிர்வாகிகள் மூத்த வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் கோட்டை செல்லப்பா அபுதாகிர் காந்தி வழக்கறிஞர் இஸ்மாயில் உள்ளிட்டோர் பங்கு பெற்றனர்..

முன்னதாக இது குறித்து பேசிய முகம்மது ரபி,ஜனநாயகத்தில் பெரும் அச்சுறுத்தலாக ஒன்றிய பாஜ.க.அரசின் நடவடிக்கைகள் இருப்பதாக கூறிய அவர்,தற்போது மக்களின் வாக்குரிமையில் தேர்தல் ஆணையத்துடன் கூட்டு சேர்ந்து வாக்கு திருட்டு மோசடியில் ஈடுபட்டுள்ளதை ராகுல் காந்தி அம்பலபடுத்தி இருப்பதாக தெரிவித்தார்..

முன்னதாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டோர் வாக்கு திருட்டு மோசடிக்கு துணை போன தேர்தல் ஆணைய அதிகாரி மற்றும் பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என கோசங்கள் எழுப்பினர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *