எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழி அருகே பிரசித்தி பெற்ற பூம்புகார் காவிரி சங்கமத்தில் மஹாளய அமாவாசையை முன்னிட்டுஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் கொடுத்து புனித நீராடி வழிபாடு :-
புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய மஹாளய அமாவாசை சிறப்பு வாய்ந்தது. ஆடி மற்றும் தை அமாவாசைகளில் தங்கள் முன்னோர்களுக்கு தர்பணம் கொடுக்காதவர்கள் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய மஹாளய அமாவாசையில் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கலாம்.
மஹாளய அமாவாசையான தர்ப்பணம் அளிப்பதன் மூலம் குடும்பத்தில் மறைந்த ஏழு தலைமுறைகளுக்கு தர்ப்பணம் வழங்கப்படுவதாக ஐதீகம். புண்ணிய நதிகள் குளங்கள் கடற்கரைகளில் பக்தர்கள் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து பலிகர்ம பூஜைகள் செய்வது வழக்கம்,
அதன்படி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த பிரசித்தி பெற்ற பூம்புகார் காவிரி சங்கமத்தில் மஹாளய அமாவாசையை முன்னிட்டு காவிரி ஆற்றின் கரையில் நூற்றுக்கணக்கான பொது மக்கள் காலையிலிருந்து முன்னோர்களுக்கு பலிகர்ம பூஜைகள் செய்து தர்ப்பணம் அளித்து வழிபாடு செய்து வருகின்றனர். காவிரி சங்கத்தில் புனித நீர் ஆடி வருகின்றனர்.