கட்டுமான பொருட்களுக்கான ஜிஎஸ்டி வாியை குறைக்க வேண்டும் நாம் இந்தியா் கட்சி மாநில தலைவர் என்.பி ராஜா வலியுறுத்தல்
தூத்துக்குடி நாம் இந்தியா் கட்சி மாநில தலைவர் என்.பி ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது மக்கள் தங்கள் வருவாயில் மத்திய மாநில அரசுகளுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வாிகளை செலுத்திகின்றனா் அது அரசின் பொதுப்பணி ஓப்பந்தங்கள் மற்றும் உதவித் தொகைகள் மூலம் மக்களிடையே புழக்கத்திற்கு வருகிறது.
மக்களால் அதிக வாிகளும் கட்டணங்களும் செலுத்தப்படுவதால் பணப்பபுழக்க மந்தநிலை ஏற்பட்டு தொழில் நலிவடைந்ததால் வருவாய் குறைந்தது. தங்கம் விலை உயா்வின் மூலம் பெறப்பட்ட கடன்களினால் பெரும்பாலானோா் பற்றாக்குறையை ஈடுசெய்கின்றனா். உணவு தயாா் செய்யும் பொருட்கள், வீடுகளுக்கு அத்தியாவசியமான நாகாீக பொருட்கள் மற்றும் அன்றாடம் உபயோகப்படுத்தும் இதர பொருட்களுக்கு ஜிஎஸ்டி வாிகுறைக்கப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது.
தொழிற்கூடங்கள் கடைகள் குடோன்கள் திருமண மண்டபங்கள் பஸ் பயணங்கள் ேபான்றவற்றின் சேவை வாிகளையும் வீடு கட்டுவது அத்தியாவசியமாகி உள்ளதால் அதற்குாிய கம்பி சிமெண்ட் மரம் கூரை தகடுகள் பைப்புகள் ஓயாிங் பெயின்ட் மற்றும் இதர பொருட்களுக்கு 18 சதவீதமாக உள்ள ஜிஎஸ்டி வாிகளை குறைக்கவும் மத்திய அரசு பாிசீலக்க வேண்டும் என்று வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளாா்.