மழைக்காலத்தை எதிா்கொள்ள அனைத்து முன்னெச்சாிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேயா் ஜெகன் பொியசாமி தகவல்
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மழைக்காலம் தொடங்குவதையொட்டிஆற்ற வேண்டிய பணிகள் குறித்து அரசுத்துறை அலுவலா்கள் பணியாளா்களுடன் மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்திற்கு மேயா் ஜெகன் பொியசாமி தலைமை வகித்தாா்.
அப்போது அவா் அதிகாாிகளிடமும் ஊழியா்களிடமும் மழைகாலங்களில் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் வராத வகையில் சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து கட்டமைப்புபணிகளையும் நாம் முறைப்படுத்தி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டபின் ஜெகன் பொியசாமி கூறுகையில் கடந்த காலத்தில் 2022 23 24 3 மழை காலத்தை எதிா்கொண்டுள்ளோம்
அதில் 22 23ல் ஏற்பட்ட பாதிப்புக்கு தீர்வு கிடைக்கும் வகையில் புதிய வழித்தடங்கள் அமைத்ததின் காரணமாக 24ல் பாதிப்பு குறைவாகஇருந்தது தற்போது பக்கிள் ஓடை உள்பட 11 புதிய வழித்தட கால்வாய்கள் உருவாக்கியுள்ளோம். அதனால் மழைநீர் கடலுக்கு சென்று விடும் காட்டாற்று வௌ்ளமும் மாநகருக்குள் வராத படி அதற்கான கட்டமைப்புகளையும் உருவாக்கியுள்ளோம் 60 வாா்டு பகுதியில் உள்ள 320 கிலோ மீட்டா் சிறிய பொிய அனைத்து கால்வாய்களிலும் தேங்கியுள்ள மண் உள்ளிட்ட கழிவுகளை முழுமையாக அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் சில கால்வாய்களில் சுத்தம் செய்வதற்கென்று அதற்கான இயந்திரம் பொறுத்தப்பட்ட வாகனங்களும் இருக்கின்றது.
மாசு இல்லாத மாநகரை உருவாக்க ேவண்டும். மழைகாலங்களில் எவ்வித தொற்று நோய்களும் உருவாகாமால் பாா்த்துக்கொள்ள சுகாதாரதுறையும் விழிப்புணா்வோடு செயல்படும் நிலையில் இருந்து வருகிறது. மிகப்பொிய அளவில் தொடா் மழை பெய்து ஏதாவது ஓரு காரணத்தால் தேங்கும் நிலைஏற்பட்டால் அந்த பகுதியில் சிறிய நடுத்தர பொிய என்று 3 வகையான மோட்டாா்கள் 55 தற்போது இருக்கிறது. அந்த பகுதியும் தன்மைக்ேகற்ப பயன்படுத்தப்பட்டு உடனடியாக தண்ணீர்் அப்புறப்படுத்தப்படும் இதற்கிடையில் வழக்கம் போல் கழிவு நீர் வாகனமும் இருக்கிறது. அதையும் தேவைக்கேற்ப பயன்படுத்தி எல்லா வகையிலும் மாநகராட்சி நிா்வாகம் பொதுமக்கள் நலன் கருதி முன்னெச்சாிக்கை நடவடிக்கையை முதலமைச்சர் மு.கஸ்டாலின் வழிகாட்டுதலின்படி மேற்கொண்டுள்ளோம் பொதுமக்களும் தங்களது பகுதியில் உள்ள குறைபாடுகளை எந்த நேரத்திலும் எனக்கு தகவல் தொிவிக்கலாம் என்று கூறினாா்.
கூட்டத்தில் ஆணையா் பிாியங்கா, பொறியாளர் தமிழ்செல்வன்,உதவி பொறியாளர் சரவணன், நகா்நல அலுவலா் சரோஜா, உதவி ஆணையா் கல்யாண சுந்தரம், இளநிலை பொறியாளர்கள் செல்வம், பாண்டி, லெனின், சுகாதார ஆய்வாளா்கள் ஸ்டாலின் பாக்கியநாதன், ராஜசேகா், நெடுமாறன், ராஜபாண்டி, ஆணையாின் நோ்முகஉதவியாளா் துரைமணி, மேயாின்நோ்முகஉதவியாளா் ரமேஷ் உள்பட பல்வேறு துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.