திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகா கீழ் மலை பழங்குடியினர் கிராமங்களான வட கவுஞ்சி ஊராட்சி,கருவேலம்பட்டி பழங்குடியினர் கிராமத்திற்கு சுமார் 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய சிமெண்ட் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
இதற்கு கொடைக்கானல் கீழ் மலை வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் வி. கருமலை பாண்டியன் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் கருவேலம்பட்டி வன கிராம சபை தலைவர்.ராசு, அரசு ஒப்பந்ததாரர்.பாலமுருகன் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் கருவேலம்பட்டி, செம்பிரான் குளம் சுய உதவிக் குழு ,கிராம சபை,வன உரிமைக் குழு பொறுப்பாளர்கள் பூமி பூஜையில் பங்கேற்றனர்.
இதற்காக முழு ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் கருவேலம்பட்டி, செம்பிரான் குளம் பழங்குடியின மக்கள் மற்றும் சுய உதவி குழுவினரின் தொடர் முயற்சியாலும்,கடந்த மே மாதம் பாச்சலூரில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில்குமாரிடம் W B M சாலையை சிமெண்ட் சாலையாக முதலில் மாற்றி தரும்படியும், அதன் பின் தொடர்ந்து சாலை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்ததின் பெயரில் மாவட்ட ஆட்சியரின் நேரடி கவனத்திற்கு கொண்டு சென்று உடனடியாக ரூபாய் 40 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ. பி. செந்தில்குமார் மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், கொடைக்கானல் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) கொடைக்கானல் திமுக கீழ் மலை வடக்கு ஒன்றிய செயலாளர், வடகவுஞ்சி ஊராட்சி செயலர், கருவேலம்பட்டி பழங்குடி மக்களின் சிரமங்களை ஊடகங்களில் பதிவு செய்த அனைத்து செய்தி தொலைக்காட்சி , பத்திரிக்கை நிருபர்களுக்கும் கருவேலம்பட்டி செம்பிரன்குளம் பளியர் பழங்குடியினர் மக்கள் சார்பாகவும், கடம்ப பூக்கள்,நாவப்பூக்கள், தீபம்,ஒளி விளக்கு, புதுமலர் பெண்கள் சுய உதவி குழுக்கள் சார்பாகவும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.