கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர் முன்னேற்ற சங்க வால்பாறை கிளை தேர்தலில் பாபு தலைமையிலான ஒரு அணியும் பெரியசாமி தலைமையிலான மற்றொரு அணியும் இரண்டு அணிகளாக போட்டியிட்டனர்
இதில் பாபு அணியின் தலைமையிலான கிளை சங்க தலைவராக தங்கவேல் 82 வாக்குகளும், செயலாளராக குமாரசாமி 76 வாக்குகளும், பொருளாளராக பாலதுரை 82 வாக்குகளும், துணைத்தலைவராக வீரராகவன் 80 வாக்குகளும், துணைச்செயலாளராக கலைச்செல்வன் 77 வாக்குகளும், மாவட்ட பிரதிநிதிகளாக ஜெயராஜ் 79 வாக்குகளும், மோகன் ராஜ் 77 வாக்குகளும், ராம் பாண்டியன் 79 வாக்குகளும் பெற்று வெற்றிபெற்றனர்
வெற்றிபெற்ற சங்க நிர்வாகிகளுக்கு அரசு போக்குவருத்துக்கழக தொழிலாளர்களும் , நிர்வாகிகளும், அலுவலக அதிகாரிகளும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்