தமிழகத்தில் தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ளதால் தமிழக முதலமைச்சர் ஆலோசனையின் படி, உள்ளாட்சித் துறை அமைச்சர் கே என் நேரு உத்தரவின் பேரில், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மேற்பார்வையில் மாநகராட்சி பகுதிகளில் மழைக்காலத்தில் எந்த ஒரு பகுதியிலும் மழை நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற அறிவுறுத்தலை அடுத்து அதற்கான பணிகளை மாநகராட்சி மேயர்ஜெகன் செய்து வருகிறார்.
அதன்படி தூத்துக்குடி மாநகரில் பல இடங்களில் புதியதாக கழிவுநீர் காண்கள் கட்டப்பட்டு வருகிறது. மேலும் ஏற்கனவே செயல்பட்டு வரும் கழிவு நீர் காண்களில் அடைப்புகள் இல்லாத வகையில் தூர்வாரும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
இதனை அடுத்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் மாநகராட்சி மேயர் ஜெகன் களத்தில் இறங்கினார். இருசக்கர வாகனத்தில் மாநகராட்சி மேயர் ஜெகன் சென்று, முதலில் தருவை மைதானம் அருகில் உள்ள ரயில்வே தண்டவாளம் பகுதியில் உள்ள கழிவு நீர் செல்லும் காண்களை பார்வையிட்டார்.
அதில் நிறைய அடைப்புகள் உள்ளதை கண்டறியப்பட்டதையடுத்து உடனடியாக அதிகாரிகளை வரவழைத்து உடனடியாக இப்போதே ஜேசிபி இயந்திரத்தையும் பணியாளர்களையும் வரவழைத்து காண்களில் உள்ள மண் மற்றும் அடைப்புகளை சுத்தம் செய்ய வேண்டும் என்று மாநகராட்சி மேயர் ஜெகன் உத்தரவிட்டார்.
அதன்பின்பு சந்தை ரோட்டில் எஸ்பிஜி சர்ச் அருகில் செல்லும் பிரதான கழிவு நீர் காண் சிறிய பகுதிக்கு உள்ளே சென்று அடைப்புகளை மாநகராட்சி மேயர் ஜெகன் பார்வையிட்டார். அப்போது அதில் சில ஆக்கிரமிப்புகள் இருப்பதாகவும் உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றி காண்களில் மணல் அள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார்.
அதன் பின்பு வஉசி சந்தை அந்தோனியார் கோவில் அருகில் கழிவுநீர் செல்லும் காண்களை பார்வையிட்டு எந்தப் பகுதியில் அடைப்பு ஏற்பட்டுள்ளது என்று கண்டறிந்து உடனடியாக அதனை சரி செய்ய உத்தரவிட்டார்.
பிறகு தீயணைப்பு நிலையம் வரை சென்று காண்களை பார்வையிட்டார். பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும், மீண்டும் எந்தவிதமான தகவலும் சொல்லாமல் பணிகள் சரியாக செய்யப்பட்டுள்ளதா? கழிவுநீர் கான்களில் கழிவுநீர் அடைப்பு இல்லாமல் செல்கிறதா? என்பதை பார்வையிட வருவேன் என்று அதிகாரிகளுக்கு மாநகராட்சி மேயர் ஜெகன் உத்தரவிட்டார்.
மாநகர் பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகளை 3 வார்டுகளில் இரு சக்கர வாகனத்தில் மாநகராட்சி மேயர் ஜெகன் சென்று ஒவ்வொரு பணிகளாக பார்வையிட்டார்.
அதுபோல கழிவுநீர் செல்லும் பிரதான காண்களையும் பார்வையிட்டு உடனடியாக அடைப்புகளை சரி செய்ய ஆணையிட்டுள்ளார். மாநகராட்சி மேயர் ஜெகன் இரு சக்கர வாகனத்திலும் நடந்தும் சென்று பணிகளை பார்வையிட்டது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மாநகராட்சி மேயர் ஜெகன் நடந்து வரும்போது பொதுமக்கள் அவரை சந்தித்தனர். அப்போது தமிழக முதலமைச்சர் அவர்கள், மாநகராட்சி மேயராக பணியாற்ற எனக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார். மாநகராட்சிக்கு தேவையான நிதிகளை பல்வேறு பணிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆலோசனையின்படி, உள்ளாட்சித் துறை அமைச்சர் கே என் நேரு அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கிறார்.
ஆகையால் தூத்துக்குடி மாநகர மக்களுக்கு எனது பணியை செய்ய வேண்டும். அது எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்பதால் இன்று பணிகளை பார்வையிட்டு வருகிறேன்.
உங்கள் பகுதியில் கழிவு நீர் காண்கள் சரியான முறையில் உள்ளதா? சாலை வசதி உள்ளதா என்று பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.
மாநகராட்சி மேயராக இருப்பவர்கள் கார்களில் பவனி வருவார்கள். ஆனால் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் இருசக்கர வாகனத்திலும் நடந்தும் சென்று பணிகளை காலை முதல் 10 மணி வரை பார்வையிட்டது பொதுமக்கள் மத்தியில், மாநகராட்சி மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
எனது பணி தொடர்ந்து மாநகர மக்களுக்காக நடைபெறும் என்று மாநகராட்சி மேயர் ஜெகன் தெரிவித்துள்ளார். விடுமுறை நாளாக இருந்தாலும், எந்த ஒரு நாளாக இருந்தாலும் காலை 6:00 மணிக்கு மாநகர மக்களுக்காக பணிகளை துவக்கும் மாநகராட்சி மேயர் ஜெகன், இரவு 12 மணி வரை ஒவ்வொரு பகுதியாக சென்று பார்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.