விபத்தில் உயிரிழந்த முதியவர்!-காவலருடன் இணைந்து நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்!
திருச்சி ஸ்ரீரங்கம் மேலூர் கிராமத்தில் வண்ணத்துப் பூச்சி பூங்கா சாலையில் உள்ள மேட்டு வாய்க்கால் அருகே எழுபது வயது மதிக்கத்தக்க முதியவர் வாகன விபத்தில் சிக்கி உயிர் இழந்த நிலையில் இருந்தார்.
திருச்சி மாநகரம் வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர் மேற்படி நபர் குறித்து விசாரிக்கையில், பெயர் விலாசம் தெரியாத நபர் மேட்டு வாய்க்கால் சாலையின் ஓரத்தில் படுத்திருந்தபோது பெரமனார் கோவிலில் இருந்து வண்ணத்துப்பூச்சி பூங்காவிற்கு தெற்கிலிருந்து வடக்கு நோக்கி சென்ற சிற்றுந்து சாலையின் ஓரத்தில் படுத்திருந்த நபர் மீது ஏறி இறங்கியதில் உடல் சிதைந்து சம்பவ இடத்திலே இறந்துவிட்ட தாக விசாரணையில் தகவல் தெரிய வந்தது. மேற்படி விபத்து தொடர்பாக அதிவேகமாகவும் கவன குறைவாகவும் செயல்பட்ட சிற்றுந்து ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இறந்தவரின் பற்றிய விவரமும் அவரது உறவினர் பற்றிய விபரமும் கிடைக்கப்பெறாததால் திருச்சிராப்பள்ளி மகாத்மா காந்தியின் நினைவு அரசு மருத்துவமனை அமரர் அறையில் உடல் வைக்கப்பட்டது
மேற்படி நபர் பற்றிய எந்த தகவலும் தெரியாத நிலையில் முதியவர் உடல் அடையாளம் கண்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. உடற்கூராய்வு செய்யப்பட்ட நிலையில் உடலை யாரும் உரிமை கோரப்படாத நிலையில் வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளர் மணிகண்டன் உரிமை கோரப்படாத உடலை நல்லடக்கம் செய்வதற்காக திருச்சிராப்பள்ளி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமாருக்கு தகவல் அளித்தார். தகவலின் அடிப்படையில்,
திருச்சி தென்னூர் குழுமிக்கரை மயானத்தில் வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் ரமேஷ், உதவி ஆய்வாளர் மணிகண்டன் முன்னிலையில் திருச்சி யோகா ஆசிரியர் விஜயகுமார்
உரிமை கோரப்படாத உடலுக்கு உரிய மரியாதையுடன் இறுதி சடங்கு செய்து நல்லடக்கம் செய்தார்.