இந்தியாவின் பழமையான மற்றும் சிறந்த சி.ஏ. பயிற்சி நிறுவனங்களில் ஒன்றாக ஜே.கே.ஷா கிளாசஸ் (J.K Shah Classes) செயல்பட்டு வருகிறது..
இந்த நிறுவனம் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் வணிகவியல் மற்றும் கணக்கியல் சார்ந்த சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து விருது வழங்கி கவுரவித்து வருகின்றனர்..
இந்நிலையில் ஜே.கே.ஷா கிளாசஸ் அகாடமி சார்பாக கோவையில் முதன் முறையாக ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா ராம் நகர் பகுதியில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது..
ஜே.கே.ஷா கிளாசஸ் நிறுவனங்களின் தலைவர் ஜே.கே.ஷா தலைமையில் நடைபெற்ற விழாவில் சுமார் 200 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்..
குறிப்பாக வணிகவியல் மற்றும் கணக்கியல் துறை சார்ந்த ஆசிரியர்களை கவுரவிக்கும் விழாவாக ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருவதாகவும்,சிறந்த பட்டய கணக்காளர்களை உருவாக்குவதில் ஆசுரியர்களின் சிறந்த பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக இது போன்ற விருதுகளை வழங்கி கவுரவிப்பதாக ஜே.கே.ஷா கிளாசஸ் பயிற்சி மையத்தின் தென்னிந்திய முதன்மை அதிகாரி வித்யா ஸ்ரீகாந்த் தெரிவித்தார்..