திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் கே. சுதாகர் தலைமை வகித்தார், கூட்டத்தில் வழிகாட்டுதல் தலைவர்களாக வலங்கைமான் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளர் எஸ்.எம். செந்தில்குமார், இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் சரவணன், சிபிஐ நகரச் செயலாளர் ராதா ஆகியோர் கலந்து கொண்டனர். இளைஞர் பெருமன்ற ஒன்றிய செயலாளர் பாக்யராஜ் எதிர்கால கடமைகள் குறித்தும் பேசினார், பேராசிரியர் ஆறுமுகம், லெனின், லெனின் ராஜ், பிரசாந்த், ஸ்ரீ காந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 01. திருவாரூர் வேலைவாய்ப்பு அலுவலகத்தை வரும் நவம்பர் 10- ந்தேதி நடைபெறவுள்ள முற்றுகை போராட்டத்தில் வலங்கைமான் ஒன்றியத்தில் இருந்து 200 இளைஞர்கள் கலந்து கொள்ளுவது,
02.2025இளைஞர் பெருமன்ற உறுப்பினர் பதிவு 03.09.2025 கணக்கு முடிப்பது,
03.04,05.10.2025 இளைஞர் தோழர்களுக்கு மாவட்ட அளவில் பயிற்சி வகுப்பு முகாம் நடைபெறுவதில் கலந்து கொள்வது.
கோரிக்கைகள்:
- வலங்கைமான் ஒன்றியம் முழுமைக்கும் இருக்கின்ற மேல்நிலை நீர் தேக்க தொட்டியை சுத்தம் செய்யாதை கண்டித்தும்,
- ஒன்றியம் முழுமைக்கும் சுத்தி திரியும் தெரு நாய்களுக்கு தடுப்பூசி போட வலியுறுத்தியும்,06. வலங்கைமான் – கோவிந்தகுடி வரை செல்லும் குண்டும், குழியுமாக உள்ள தார் சாலையை உடனடியாக செப்பனிட வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் வருகின்ற அக்டோபர் 10- ந்தேதி வலங்கைமான் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.