கோவை மாவட்டம் வால்பாறையில் பொள்ளாச்சி லயன்ஸ் கிளப் கோழிப்பாறை அகல்யா டயாபடீஸ் மருத்துவமனை அகல்யா கண் மருத்துவமனை மற்றும் கோவை தெற்கு மாவட்ட அம்மா பேரவை இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் மருத்துவமனை வால்பாறையில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
இம்முகாம் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் விஜயகுமார் தலைமையில் தோட்டத் தொழிலாளர் பிரிவு மாநில தலைவர் வால்பாறை வீ.அமீது, நகரச்செயலாளர் மயில் கணேசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு, ஆனைமலை ஒன்றிய செயலாளர் கார்த்திக் அப்புசாமி ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைக்கப்பட்ட நிலையில் வால்பாறை தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட சுமார் நானூறு க்கும் மேற்ப்பட்டவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்
வெகு சிறப்பாக நடைபெற்ற இம்முகாமில் மாவட்ட பாசறை இணைச்செயலாளர் அ.சலாவுதீன், மாவட்ட பேரவை பொருளாளர் சிங், நிர்வாகிகள் ஐடி விங்க் நகரச்செயலாளர் சண்முகம், சண்முகவேல், இளைஞரணி நகரச்செயலாளர் சசிக்குமார், சாய் கிருஷ்ணன், நகர பேரவை இணைச்செயலாளர் ராஜமாணிக்கம் மற்றும் அனைவரும் கலந்து கொண்ட நிலையில் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் ஆர்.நரசப்பன் இம் முகாம் ஏற்பாடுகளை துரிதமாக செய்து சிறப்பித்தார்