கோவை பி.எஸ்.ஜி. மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவன தின விழா பி.எஸ்.ஜி.வளாக ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.
பி.எஸ்.ஜி &சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன்
தலைமையில் நடைபெற்ற இதில், கல்லூரியின் முதல்வர் சுப்பாராவ் அனைவரையும் வரவேற்று பேசினார்..
விழாவில் சிறப்பு விருந்தினராக பத்மஸ்ரீ விருது பெற்ற இரைப்பை மற்றும் குடல் நோய் தொடர்பான சிகிச்சை நிபுணர் டாக்டர் பிலிப் அகஸ்டின் கலந்து கொண்டு பேசினார்..
அப்போது பேசிய அவர்,மருத்துவ துறையில் வரும் நவீன தொழில் நுட்பங்களை மருத்துவர்கள் கற்று கொள்வது அவசியம் என்றாலும்,அறிவியலை தாண்டி நோயாளிகளின் மனதை அறிந்து சிகிச்சை செய்வதில் மருத்துவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றார்..
செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில் நுட்பங்கள் எல்லா துறைகளுக்கும் வளர்ச்சி என்றாலும் மருத்துவ துறையில் மனித அறிவின் தேவை எப்போதும் தேவை என அவர் தெரிவித்தார்..
தொடர்ந்து நடைபெற்ற விழாவில்,பி.எஸ்.ஜி.மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பயின்று தற்போது பிரபலமான மருத்துவர்களாக இருக்கும் மருத்துவர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது..