கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் சரஸ்வதி பூஜை, விஜயதசமி, ஆயுதபூஜையை முன்னிட்டு நகராட்சி பொறுப்பு ஆணையாளர் குமரன் தலைமையில் நகர் மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம், நகரச்செயலாளர் குட்டி என்ற சுதாகர், நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவல அதிகாரிகள் முன்னிலையில் துரித ஏற்பாடுகள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது
அதைத்தொடர்ந்து அனைவருக்கும் பொங்கல், சுண்டல் மற்றும் மஞ்சப்பையில் இனிப்புகள் வழங்கி சிறப்பாகக் கொண்டாடப்பட்டது
இந்நிகழ்ச்சியில் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு முன்னுரிமை அளித்து பூஜைகள் நடத்தியதால் பணியாளர்கள் அனைவரும் பெரும் மகிழ்ச்சியடைந்தனர் வெகு சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நகராட்சி பணியாளர்களும் பொதுமக்களும் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்