திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் செட்டித்தெரு ஸ்ரீ வேம்படி சீதளாதேவி மகா மாரியம்மன் ஆலயத்தில் நவராத்திரி திருவிழாவில் ஏழாம் நாள் 29- ந்தேதி திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு அம்மன் வெண்ணைத்தாழி அலங்காரத்தில் காட்சி அளித்தார், இரவு 7 மணிக்கு சமய சொற்பொழிவு நடைபெற்றது,

இரவு 8 மணிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அருட்பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. ஏழாம் நாள் மண்டகப்படி உபயதாரர்கள் நெறிக்குடி சி.வைத்திலிங்க உடையார், குடந்தை கு.சிவசங்கரவேல் உடையார் குடும்பத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

எட்டாம் நாள் 30-ந்தேதி செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு அம்மன் ஸ்ரீ தனலெட்சுமி அலங்காரத்தில் காட்சி அளித்தார், இரவு 7 மணிக்கு சமய சொற்பொழிவு நடைபெற்றது, இரவு 8 மணிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அருட்பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. எட்டாம் நாள் மண்டகப்படி உபயதாரர் வலங்கைமான் ரெங்கநாயகி லாரி சர்வீஸ் ஆர். ராமலிங்கம் குடும்பத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

நவராத்திரி திருவிழா ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர்/தக்கார் கோ.கிருஷ்ணகுமார், ஆய்வாளர் க.மும்மூர்த்தி, மண்டகப்படி உபயதாரர்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *