திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில் வட்டார இளைஞர் காங்கிரஸ் சார்பில் அண்ணல் காந்திஜியின் 156- வது பிறந்த தினவிழா கொண்டாடப்பட்டது,
நிகழ்ச்சியில் வலங்கைமான் வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவர் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்தார், தொழிற்சங்க நகரத் தலைவர் அகமது மைதீன், குடந்தை கவிஞர் ஐயப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,
சிறப்பு விருந்தினர்களாக மாநில இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராஜா சுடலைக்கனி, திருவாரூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் அஜித் குமார் ஆகியோர் கலந்து கொண்டு அண்ணல் காந்தியடிகளின் வரலாற்றைப் பற்றியும், கர்மவீரர் காமராஜர் அவர்களின் சாதனைகள் பற்றியும், மாணவர்களிடையே விளக்கி பேசினார்கள், தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
முன்னதாக நகர இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவி பிரியதர்ஷினி அனைவரையும் வரவேற்று பேசினார், நிகழ்வில் மாநில இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராஜா சுடலைக்கனி, திருவாரூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் அஜித் குமார் ஆகியோர் அண்ணல் காந்தியடிகள், கர்மவீரர் காமராஜர் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து கர்மவீரர் காமராஜர் அவர்களின் நினைவு தினத்தை அனுசரித்து அனைவராலும் அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்வில் இளைஞர் காங்கிரஸ் சஞ்சய் கபூர், காங்கிரஸ் மூத்த முன்னோடி மருதமுத்து மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.