மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே திருமால் கிராமத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது வாழ்வாதாரமான விவசாய நிலங்களை நம்பி வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் இக்கிராமத்தில் கிரஷர் கல்குவாரி அமைப்பதற்கு அனுமதி பெற்று பணிகள் நடைபெற்று வருவதையொட்டி ,நாள்தோறும் நூற்றுக் கணக்கான லாரிகளில் கிராவல் மண் கடத்தப்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனைத் தொடர்ந்து சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர்
ஆர்.பி.உதயகுமார் கல்குவாரியை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளார். மேலும் கிராம மக்களுக்கு ஆதரவாக போராட்டத் திலும் பங்கேற்றார்.
இதனைத் தொடர்ந்து விவசாய விளை நிலங்கள் மண் துகள் களால் அழிந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரமான விளை நிலங்களை பாதுகாக்கவும், விவசாயிகளின் உயிர் காக்கவும் இந்த கல்குவாரி அனுமதியை ரத்து செய்ய கோரி, 1000 க்கும் மேற்பட்டோர் திருமால் கிராமத்தினர் தங்களது ரேஷன் கார்டுகளை ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கும் போராட்டத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமார் தலைமையில் ஊர்வலமாக அங்கு இருந்து கடுமையான கோஷமிட்டவாறு நடந்து வந்தனர். இதில் பள்ளி மாணவர்களும் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வந்த பொதுமக்களை காவல் துறையினர் அனுமதிக்க மறுத்தனர். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் கொளுத்தும் வெயில் என்று பாராமல் கல்குவாரியை தடை செய்ய வேண்டும் என்று கோஷம் போட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் மேலும் வெயில் தாக்கம் அதிகமானதால் நான்கு பெண்கள் மயக்கமடைந்தனர்
இதனை தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர், காவல் துறையினர் ஆர் .பி உதயகுமாரிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்
அப்பொழுது பொதுமக்கள் அனைவரையும் மனு அளிக்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்டபோது அதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து ஆர்.பி. உதயகுமார் மற்றும் பெண்கள், விவசாயிகள் அனைவரையும் கைது செய்து தனியார் மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கும் போராட்டம் தொடர்ந்து இரவிலும் நடைபெற்று வருகிறது.