தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரம் நகர, ஒன்றிய, பேரூர் கழகத்தில் பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம்.
தாராபுரம், திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் திருப்பூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட நகர ஒன்றிய பேரூர் கழக திமுக நிர்வாகிகள், பூத் கமிட்டி உறுப்பினர்களுக் கான ஆலோசனைக் கூட்டம் கிழக்கு மாவட்ட திமுக தாராபுரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளரும் செய்திதுறை அமைச்சருமான மு.பெ. சாமிநாதன் தலைமையில், திமுக தேர்தல் மண்டல பொறுப்பாளரும், உணவுத்துறை அமைச்சருமான அர.சக்கரபாணி, ஈரோடு எம்பி.பிரகாஷ், மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன், தொகுதி பொறுப்பாளர் கணேசன். மாவட்டத் துணைச் செயலாளர்கள் ராசி கே. ஆர்.முத்துக்குமார், பிரபாவதி பெரியசாமி, ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
திருப்பூர் கிழக்கு மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தாராபுரம், மூலனூர், குண்டடம், குடிமங்கலம், உள்ளிட்ட பகுதிகளில் நகர ஒன்றிய பேரூர் கழக திமுக நிர்வாகிகள் பூத் கமிட்டி உறுப்பினர்கள், என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் தாராபுரம் நகரக் கழக செயலாளர் முருகானந்தம் அனைவரையும் வரவேற்று பேசினார்.
தாராபுரம் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் குண்டடம் மேற்கு ஒன்றிய பகுதிகளில் இருந்தும் தாராபுரம் நகரில் இருந்தும் 65 பேர் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.
இதேபோல் தாராபுரம் நகரப்பகுதிகளில் இருந்து 18 வயது நிறைந்த 10 இளைஞர்கள் அமைச்சர்கள் முன் திமுகவில் இணைத்தனர் இவர்களுக்கு இரு வண்ண நூலாடைகளை அணிவித்து கழகத்தில் நிகழ்ச்சியின் போது குண்டடம் மேற்கு ஒன்றிய கழகம் சார்பில் அதிமுக. பாஜக, உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து வெளியே வந்த 55 பேர் அமைச்சர்கள் முன்னிலையில் திமுகவில் இணைந்த இணைத்தனர்.
நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தனசேகர், பொதுக்குழு உறுப்பினர் கருணாகரன், தாராபுரம் நகர் மன்ற தலைவர் பாப்புகண்ணன், மூலனூர் பேரூர் கழகச் செயலாளர் மக்கள் தண்டபாணி, மூலனூர் மேற்குஒன்றிய செயலாளர் துரை தமிழரசு, குண்டடம் ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், பேரூர் கழகச் செயலாளர் அன்பரசு. தாராபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் கே கே துரைசாமி, கொளத்துப்பாளையம் பேரூராட்சி தலைவர் சுதா கருப்புசாமி, ங்க மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி அன்பழகன். ஆனந்தி, மற்றும் திமுக நகர ஒன்றிய இளைஞரணி, உள்ளிட்ட திமுகவின் சார்பு அமைப்புகளை சார்ந்தவர்களும் பலர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியின் நிறைவாக தாராபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.வி செந்தில் குமார் நன்றி கூறினார்.