சத்தியமங்கலம் கரூரில் நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் இறப்புக்கு காரணம் என குற்றம் சாட்டி புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பில் சத்தியமங்கலம் பஸ் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் தோழர் பாலு தலைமையில் தமிழுரியன், தமிழரசு, வழக்கறிஞர் சக்திவேல் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் த வெக தலைவர் விஜயை உடனடியாக கைது செய்ய கோரியும் திரைப்பட மாயைகளுக்கு பலியாகாதீர்என வலியுறுத்தியும் புரட்சிகர இளைஞர் முன்னணி தோழர்கள் முழக்கமிட்டார்கள் இதில் ஜனநாயக அமைப்புகளும் மற்றும் 50க்கும் மேற்பட்டவர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர் இறுதியில் தென்தமிழி அவர்கள் நன்றி கூறினார்