மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுக்கா, ஜோதிமாணிக்கம் கிராமத்தில் அமைந்திருக்கும், 1000-ஆண்டுகள் பழமையான அருள்மிகு ஜோதிமாணிக்கம் பெருமாள் திருக்கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு,புரட்டாசி திருவிழா சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.
பின்னர் மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். இவ்விழாவை ஜோதிமாணிக்கம் குலதெய்வமாக கும்பிடும் பெருமாள் கோவில் பங்காளிகள், ஜோதிமாணிக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.பூஜைகளை பரம்பரை பங்காளிகள் குடும்பத்தார்களும், பரம்பரை பூஜாரி பெ.ரவிச்சந்திரன் ஆகியோர் செய்தனர்.