உத்தமபாளையத்தில் நமது மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் நமது மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் அதன் நிறுவனத் தலைவர் பி.எல்.ஏ. ஜெகநாதன் மிஸ்ரா தலைமையில் தமிழக கேரள எல்லையான குமளியில் கட்டப்பட்டு விரைவாக திறக்க உள்ள புதிய பஸ் நிலையத்திற்கு கற்புக்கரசி மக்கள் தேவி கண்ணகி பெயர் சூட்ட வேண்டும் சிதிலமடைந்துள்ள வரலாற்று சின்னமான கண்ணகி கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்திட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
மேலும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் கண்ணகியின் சிலம்பு ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில பொறுப்பாளர் கூடல் செல்வேந்திரன் கட்சியின் மாநில பொறுப்பாளர் இ.எம்.எஸ். அபுதாகீர் உள்பட கட்சியின் மாநில மாவட்ட நகர ஒன்றிய பேரூர் மற்றும் ஊரக நமது மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்