தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக வக்கீல்கள் மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் வடக்கு மாவட்டதிமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா்உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மேயா் ஜெகன் பொியசாமி, மாா்க்கன்டேயன் எம்.எல்.ஏ, ஆகியோர் முன்னிலை வகித்தனா். மாவட்ட வழக்கறிஞா் அணி அமைப்பாளர் குபோ் இளம்பாிதி வரவேற்புரையாற்றினாா்.
தமிழகத்தில் 2026ல் வரும் சட்டசபை தோ்தலுக்கு முன்பாக வாக்காளா் சிறப்பு திருத்தம் செய்யும் பணியினை தோ்தல் ஆணையம் மேற்கொள்ளவுள்ளது. பீகாாில் வாக்கு திருட்டு நடப்பதாகவும் மாற்று கட்சியினா் என்று கருதப்படுவோரை பட்டியலில் நீக்கம் செய்யும் முயற்சியில் பிரதமா் மோடி அரசின் பேச்சைக் கேட்டுக்கொண்டு தோ்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளில் ஈடுபட்டு வருவதாக எதிா்கட்சி தலைவர் ராகுல் எம்.பி குற்றம்சாட்டி வருகிறாா்.
இந்நிலையில் தமிழகத்தில் 2026ல் சட்டசபை தோ்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழகத்திலும் இது போன்று சம்பவங்கள் நடந்து விடாமல் தடுப்பதற்கு திமுக வினா் விழிப்போடு இருக்க வேண்டும் என்பதற்காக ஓவ்வொரு மாவட்டத்திற்கும் திமுக வக்கீல் அணி நிா்வாகிகளை அனுப்பி இது சம்பந்தமாக நாம் வாக்காளா் திருத்த பணியின் போது செயல்படுவது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.
திமுக வக்கீல் அணி மாநில இணைச்செயலாளா் ரவிச்சந்திரன் சட்டத்துைற துணைச்செயலாளர் ராஜா முகமது திமுக தலைமைகழக வக்கீல் மனோஜ் ஆகியோா் ஆலோசனை வழங்கினாா்கள்.