திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் காந்தியின் காதி இயக்கம குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் செயலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் துவக்க உரையாற்றினார்.
தலைவர் லால்குடி விஜயகுமார் தலைமை வகித்தார். நிறுவனர் நாசர், துணைத் தலைவர் காசிநாத்,பொருளாளர் தாமோதரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். அஞ்சல் தலை சேகரிப்பாளர் இளம்வழுதி காந்தியின் காதி இயக்கம் குறித்து பேசுகையில், காந்தியின் காதி இயக்கம் 1918-ல் காந்தி காதி இயக்கத்தைத் தொடங்கினார், இது இந்தியாவின் கிராமப்புற மக்களுக்கு ஒரு வாழ்வாதாரமாக மாறியது.
அகில இந்திய காதி மற்றும் கிராமத் தொழில்கள் வாரியம் இதன் முக்கிய நிர்வாக அமைப்பாகும். காதி இயக்கம் “காதியை ஒரு வாழ்க்கை முறையாக” என்ற கொள்கையின் அடிப்படையில் இயங்கியது என்பதை, இந்திய அஞ்சல் துறை வெளியிட்ட அஞ்சல் உறை மற்றும் அஞ்சல் தலையினை காட்சி படுத்தி எடுத்துரைத்தார்.
அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் அன்பழக பாண்டியன்,சிவக்குமார்,அருள்மொழி தேவன், முத்துராம் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்