மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன்

மயிலாடுதுறை அருகே ஆத்தூரில் பழுதடைந்த குடிசைவீட்டில் பேத்தியுடன் வசித்து வந்த மூதாட்டிக்கு புதிய வீடு கட்டிக்கொடுத்த சமூக சேவகர் பாரதிமோகன். கிரகபிரவேஷ விழாவில் ஊர்பொதுமக்கள் கையில் தேசியகொடி ஏந்தி வந்து பங்கேற்று வாழ்த்து. 5 மாதமாக உணவுபொருட்கள் வழங்கி ஆதரவு அளித்து வரும் சமூக சேவகரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது:-

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே ஆத்தூர் கிராமத்தில் 70 வயது மூதாட்டி சமுத்திரம்மேரி தனது பேத்தி ஆரோக்கியமேரி என்பவருடன் குடிசைவிட்டில் வசித்து வருகிறார். பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இவரது குடிசைவீடு சேதமடைந்து மழைகாலங்களில் வசிக்க முடியாமல் அல்லல்படுவதாக பெரம்பூர் பகுதியை சேர்ந்த சமூக சேவகர் பாரதி மோகன் என்பவருக்கு அப்பகுதி இளைஞர்கள் தகவல் அளித்துள்ளனர்.
பாரதி மோகன் தனது பாரதிமோகன் அறக்கட்டளை மூலம் பல்வேறு உதவும் கரங்களைக் கொண்டு சமுத்திரம்மேரிக்கு சுமார் 2 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் ஸ்லாப் மூலம் வீடு கட்டி சிமெண்ட் சீட் மூலம் மேற்கூரை அமைக்கப்பட்டு நிலை கதவுகள் உட்பட அனைத்தும் பொருத்தப்பட்டு வீட்டிற்கு வர்ணங்கள் பூசி ஏழ்மை நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் சமுத்திரமேரியிடம் கிரகபிரவேஷம் செய்து வீட்டை ஒப்படைத்தார். தேசிய கொடி ஏந்தி புதுமனை புகுவிழாவில் ஊரே திரண்டு வந்து வீட்டை ரிப்பன் வெட்டி திறந்துவைத்து குடும்பத்தினரிடம் ஒப்படைத்து வாழ்த்து தெரிவித்தனர். புதியவீட்டில் பால்காய்ச்சி படையல் இட்டு வழிபாடு செய்தனர்.
வீடு கட்டி வழங்கிய பெரம்பூர் சமூக சேவகர் பாரதி மோகனுக்கு இளைஞர்கள் ஊர் பொதுமக்கள் ஆரோக்கியமேரி(50), பாட்டி சமுத்திரம்மேரி நன்றி தெரிவித்தனர். தனக்கு வீடு கிடைத்து விட்டது என்ற மகிழ்ச்சி கடலில் பாட்டியும், பேத்தியும் அனைவருக்கும் திருநீர் பூசி மகிழ்ச்சியடைந்தனர். 6 மாதமாக இந்த குடும்பத்தினருக்கு அரிசி மளிகை பொருட்கள் வழங்கி உதவி செய்வதாக தெரிவித்த பாரதிமோகன் இதுவரை ஏழைமக்கள் 15 பேருக்கு வீடுகட்டி வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.