இந்திய ஜனநாயக கட்சியின் தீபாவளி கொண்டாட்டம்..!

இந்திய ஜனநாயக கட்சியின் கோவை மண்டலம் சார்பில் தீபாவளி விழா – ஐ.ஜே.கே. கோவை மண்டல அலுவலகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் டாக்டர் பாரிவேந்தர் மற்றும் இளைய வேந்தர் ரவி பச்சமுத்து அவர்களின் வழிகாட்டிதலின்படி இந்நிகழ்வை இணைப் பொதுசெயலாளரும், மார்ட்டின் குழுமங்களின் நிர்வாக இயக்குநருமான திருமதி லீமாரோ ஸ்மார்ட்டின் அவர்கள் தலைமையேற்று நடத்தினார்.

முதல் நிகழ்வாக கரூரில் அரசியல் கட்சியின் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த குழந்தைகள், முதியவர்கள், இளைஞர்கள் என 41 பேருக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும் கூட்ட நெரிசலில் படுகாயம் அடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அப்பாவி மக்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது.

தொடர்ந்து நூறு மகளிருக்கு தையல் இயந்திரங்களும், 50 மாணவ மாணவியர்களுக்கு சைக்கிள்களும், பின்தங்கிய மலைவாழ் மக்களுக்கு தீபாவளி புத்தாடைகளும், மாணவர்களுக்கு காலணிகளும் வழங்கி விழா பேருரை ஆற்றினார்.

அவர் தனது உரையில் அரசியல் கட்சி கூட்டங்களுக்கு குழந்தைகளையும், முதியோர்களையும் அழைத்து வருவதையும், அனுப்பி வைப்பதையும் பெற்றோர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். மேலும் கூட்டம் நடத்தும் அரசியல் கட்சி தலைவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் கூட்டத்திற்கு வந்து கலந்து கொள்ள வேண்டும். அரசும், காவல்துறையும் கூட்டத்திற்கு வரும் மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறினார்.

மேலும் இந்திய ஜனநாயக கட்சி கோவை மண்டலம் சார்பில் தொடர்ந்து தீபாவளி, கிறிஸ்மஸ், புத்தாண்டு, பொங்கல் போன்ற அனைத்து விழாக்களும் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக இந்த தீபாவளியை சிறப்பாக அனைத்து மக்களும் கொண்டாடும் வகையில், மேற்கண்ட நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பித்துள்ளோம், அனைத்து மக்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் என்று கூறினார்.

இவ்விழாவில் 50-க்கும் மேற்பட்ட மகளிர் மற்றும் இளைஞர்கள் மாற்றுக் கட்சிகளில் இருந்து ஐ.ஜே.கே.வில் இணைத்தனர். அவர்களுக்கு ஐ.ஜே.கே. மப்ளர் அணிவிக்கப்பட்டது.

இவ்விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

விழா நிறைவில் ஐ.ஜே.கே. மகளிர் அணியினரின் கோலாட்டமும், கும்மியாட்டமும் அனைவரையும் மகிழ்ச்சிக்குள் ஆழ்த்தியது.

திருமதி லீமாரோஸ்மார்டின் அவர்கள் மகளிர் அணியினருடன் இணைந்து கோலாட்டம், கும்மியாட்டம் ஆடி அனைவரையும் மகிழ்ச்சிக்குள் ஆக்கினார்.

இந்நிகழ்ச்சியில் திருமதி குளோரி ஜான் பிரிட்டோ, மாநில போராட்ட குழு செயலாளர் அமலன் சவரிமுத்து, கோவை மண்டல ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராபின்சன், நாமக்கல் முத்துராஜ், சேலம் ராணி, ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி மாவட்ட செயலாளர் சதீஷ்குமார், கோவை வடக்கு தொகுதி மாவட்ட தலைவர் முத்துச்செல்வம், தொண்டாமுத்தூர் தொகுதி மாவட்ட தலைவர் கே. மணிமாறன், கவுண்டம்பாளையம் தொகுதி மாவட்ட தலைவர் ராஜா ராமச்சந்திரன், கிணத்துக்கடவு தொகுதி மாவட்ட தலைவர் செபாஸ்டின், கோவை தெற்கு தொகுதி மாவட்டத் தலைவர் ஈஸ்வரன், கோவை தெற்கு தொகுதி மாவட்ட செயலாளர் பொற்காலம் ராஜா, திருமதி ஸ்டெல்லா, திரு. லெனின், சிங்காநல்லூர் தொகுதி ஐ.டி விங்.தலைவர் பாஸ்ட்லின் மற்றும் கட்சி நிர்வாகிகளும், பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *